மீது, பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதால் பிரதான ரயில் பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 5.10 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்த ரயில் மீதே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







