நாட்டின் பிரதான 5 வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வழங்கியுள்ளார்.
களுபோவில, ராகம, மட்டக்களப்பு, பேராதனை ஆகிய 4 போதனா வைத்தியசாலைகளுக்கும், ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலைக்கும் இவ்வாறு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, களுபோவில போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டபிள்யூ.எம்.யு.எஸ். விஜேமான்ன, ராகம போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டி.ஏ.கே. பெரேரா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜி. சுகுணன் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டபிள்யூ.எம்.சி.எம். விஜேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ரிட்ஜ்வே ஆரியா சிறுவர் வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் டபிள்யூ.ஏ.பி.பி. ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.







