Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடிய நாள் இன்று; உறவுகளின் கண்ணீருடன் நினைவேந்தல்!

ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடிய நாள் இன்று; உறவுகளின் கண்ணீருடன் நினைவேந்தல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுனாமி ஏற்பட்டு 19 வதுஆண்டு நினைவு இன்று (26) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றதுடன்,உணர்வு பூர்வமாகவும் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 19வது ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர், டச்பார்,புதுமுகத்துவாரம்,நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.

திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் உறவுகளின் கண்ணீருடன் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

கிறிஸ்தவ முறைப்படி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உறவுகள் அஞ்சலி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம்,முன்னாள் மாநகரசபையின் பிரதி முதல்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று டச்பார் வீதியில் உள்ள சுனாமி ஞாபகார்த்த நினைவுத்தூபியில் அருட்தந்தை லோரன்ஸ் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் புதுமுகத்துவாரம் பகுதியில் இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு அமைவாக சுனாமி அனர்த்ததினால் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று கடலில் அவர்களுக்கான பிராயசித்தம் செய்யப்பட்டது.

இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் பல கோடி ரூபா சொத்துகள் இழக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
Next Post
போலி பொலிஸார் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து வெளியாகும் போலி விளம்பரங்கள் தொடர்பில் இலங்கை அரசு விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.