கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் மூன்று வருட பூர்த்தியினை முன்னிட்டு புதிய சீருடை அறிமுகம், அதிதிகள் கெளரவிப்பு, மிகத்தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்கள் வழங்கலுடன் வருடாந்த ஒன்றுகூடலும் என முப்பெரும் நிகழ்வு மீராவோடை அந்நூர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் ஏ.எல்.சதாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கழகத்தலைவர் ஐ.எம்.றிஸ்வி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இ பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் நாஸர் கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களும் சிறப்பதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எம்.எம். அல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன்இ மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் யுது.மர்சூக் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளரும் கழகத்தின் ஆலோசகருமான எஸ்.ஏ.எம்.றியாஸ் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் கழகத்தின் உப தலைவருமான எம்.ஐ.ஏ.றமீஸ் இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மிகத் தேவையுடைய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தார்.