Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழலுக்கு எதிரான புதிய சட்டம் தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு கடந்த (28) செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளீதரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் ஆ. நவேஸ்வரன் மற்றும் சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.

இச்செயலமர்வில் பொதுச் சேவையில் ஈடுபடும் கனிஷ்ட, சிரேஷ்ட மற்றும் பதவிநிலை வரை சகல மட்டங்களிலுமான அனைத்து அரச சேவை உத்தியோகத்தர்களும் 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க ஊழலுக்கு எதிரான சட்டம் புதிய சட்டம் மற்றும் அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளை வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது நாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் ஊழலற்ற நாடுகள் பட்டியலில் உள்ளீர்க்கச் செய்வதற்கான முயற்சியாக பொதுச் சேவையை முன்னேற்றுதல், ஊழலற்ற நேர்மையான அலுவலராக செயற்பட வேண்டியதன் அவசியம், ஊழல் மற்றும் மோசடி என்றால் என்ன?, ஊழலின் வடிவங்கள், அவை தொடர்பான சட்டங்கள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குப் பிராந்தியத்திற்கான உதவிப் பதிவாளர் நாயகம் கே. திருவருள், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். பஸீர், மாவட்ட பொறியியலாளர் ரி. சுமன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ரி. ஜெய்தனன், உட்பட மாவட்ட செயலகத்தில் சகல பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
Next Post
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான அறிவித்தல்; கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை!

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான அறிவித்தல்; கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு