செட்டிக்குளத்தில் புத்தர் சிலையை வைத்தவர் மன நோயாளியாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிக்குளத் தில் நேற்றுமுன்தினம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய செட்டிக்குளம் பொலிஸார் ஒருவரை கைது செய்து விடு வித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரே புத்தர் சிலையை வைத்தார் என்றும் அதனால், அவரை கைது செய்த பின்னர் விடுதலை செய்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். வைக்கப்பட்ட புத்தர் சிலை அந்த இடத்திலிருந்து
அகற்றப்பட்டுள்ளது.