Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்கு முறையினைக் கண்டித்து திருமலையில் போராட்டம்

காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்கு முறையினைக் கண்டித்து திருமலையில் போராட்டம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து இன்று (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில் சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில்,

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கிறது.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக் கூறி, பெரும் பிரச்சாரம் செய்துவந்த ஜேவிபி அரசு முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர் சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும்.

அத்துடன் நீண்ட நாட்களாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வினையும் தராமல் அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.

கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலயத்தில் காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினை மீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பல நூறு சமயத் தலங்களின் பிரச்சினைகள் தொடர்பான பட்டியல் நீள்கிறது என்று குரல் எழுப்பினர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
Next Post
பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு