திருகோணமலை துறைமுகத்திலிருந்து எண்ணெய் குதங்கள் வரை குழாய் மூலம் எண்ணெய் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பெற்றோலிய பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்தும் நோக்கில் இந்தியா இந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது என்று அறிய வருகின்றது.
மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக குழாய்வழி எண்ணெய் விநியோகத் திட்டம் விரைவுபடுத்தப்படுகின்றது. இது குறித்து இரு நாடுகளும் பேச்சில் ஈடுபட்டு வருகின்றன.அண்மையில், எரிசக்தி முதலீட்டாளர்களு டனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அதிகமாக காணப்படுவதால், பச்சை ஐதரசன் உற்பத்திக்கு சாதகமான இடமாக திருகோணமலை அடையாளம் கண்டதாகத் தெரிவித்தார்.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளையும் துரிதமாக புனரமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவும் ஜனாதிபதி பணித்திருந்தார். இதன்படி, பயன்படுத் தப்படாமல் உள்ள 61 எண்ணெய் குதங் களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றை லங்கா ஐ. ஓ. சி. நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
திருகோணமலை துறைமுகத்துக்கு எண்ணெய் விநியோகக் குழாய் அமைப்பது இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் இது இரு நாடுகளிடையேயுமான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.எண்ணெய் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று இந் திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.