மத பிரசங்கி ருவான் பிரசன்னவின் பிரசங்கத்தில் கலந்துகொண்டிருந்த மற்றுமொருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலனறுவை – சிரிபுறவைச் சேர்ந்த 27 வயதான வணிகர் ஒருவர், இதற்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டவர்கள் போலவே விசமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
எனினும் அவர் அவரது உறவினர்களால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த மத பிரசங்கி ருவான் பிரசன்ன குணரத்ன, “மறுப்பிறப்புக்கு தற்கொலை” என்ற ரீதியில் பிரசங்கம் செய்து வந்ததுடன், அண்மையில் அவரும் அவரது குடும்பத்தாரும் தற்கொலை செய்துக்கொண்டனர்.
இவ்வாறு இதுவரையில் 7 பேர் தற்கொலை செய்திருப்பதாகவும், பொதுமக்கள் இவ்வாறான மூடத்தனங்களுக்கு பலியாக வேண்டாம் எனவும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.