Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தளபதி விஜய்யின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பா?

தளபதி விஜய்யின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பா?

3 years ago
in சினிமா, செய்திகள்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கின்றார்.

‘The GOAT’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் யோகிபாபு, பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஸ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜீ, சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதனையடுத்து, புதுவருடத்தை முன்னிட்டு படக்குழு படப்பிடிப்பு நடவடிக்கைகளை ஒத்திவைத்தது.

இந்தநிலையில் தளபதி -68 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்பாக இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வருவது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலாகி வந்தன.

இந்தநிலையில் நடிகர் விஜய் இலங்கை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையை உலக வரைப்படத்தில் இருந்து நீக்குவதாக எச்சரிக்கும் வகையில் பேசிய காணொளிகள் மீள பகிரப்பட்டு வந்தன.

இதனை அவதானித்த சினிமா விமர்சகர்கள் நடிகர் விஜய்யின் வருகையை இலங்கையர்கள் சிலர் எதிர்க்கக்கூடும் எனவும், அதேவேளை விஜய்யின் வருகையை சினிமா ரசிகர்கள் என்ற வகையில் பலர் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விஜய் அண்மையில் விஜயகாந்தின் இறுதி சடங்குகளுக்கு சென்றிருந்த வேளையில் சிலர் அவர் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
பாராளுமன்றம் கலைக்கப்படுகிறதா?

பாராளுமன்றம் கலைக்கப்படுகிறதா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு