Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நத்தார் விருந்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மாயம்!

பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

3 years ago
in செய்திகள்

கிளிநொச்சி – பூநகரியில் இன்று (5) முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பூநகரி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பல கலந்துரையாடல்கள் இன்று (05) மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொன்னாவெளி பகுதியில் சீமெந்து நிறுவனமொன்றுக்கு அகழ்வு பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் 10 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடல், பொதுமக்கள் மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையிலும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அரசியலமைப்பில் உரிமை காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறன்றி, சட்டத்திற்கு விரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில், பொலிஸாரினால் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்ய முடியுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஆர்பாட்டத்தின் போது சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு அவற்றை தடுக்க பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
வட் வரி விவகாரம் ; மீண்டும் பிள்ளையான்- வியாழேந்திரன் மீது குற்றம் சுமத்தும் சாணக்கியன்!

வட் வரி விவகாரம் ; மீண்டும் பிள்ளையான்- வியாழேந்திரன் மீது குற்றம் சுமத்தும் சாணக்கியன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு