பொலிஸ் விசேட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சியின் ஒரு பகுதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்காத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இனந்தெரியாத சில நபர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி காட்டுப்பன்றியொன்றை கொன்றுள்ளதாக ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சியில் ஒரு பகுதி மாத்திரமே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காட்டுப்பன்றி இறைச்சியின் ஒரு பகுதி ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.