வளிமண்டலவியல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பல்வேறு காலநிலை நிலைமைகளை முன்னறிவிப்பதற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடமத்திய மாகாணத்தில் கூடுதல் மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், அண்ணளவாக 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.