Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சுவிஸ் கிராமம் பகுதியில் வடி சாராயம் தயாரித்து வந்த பெண் கைது!

மட்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவன் தாக்குதல் நடாத்தியதில் 4 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிசார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடாத்தியதில் 4 பொலிசார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் மதுபோதையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5ம் திகதி மாலை 6 மணிக்கு அந்த பகுதி வீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ள நிலையில் அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார், சகோதரி தமது தோள்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்த நிலையில் குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிசார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்ததையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிளித்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற இரு பொலிசாரை இளைஞனுடன் சேர்ந்து அவரது தாயார் சகோதரிகளும் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த 4 பொலிசார் மற்றும் பொலிசார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியில் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
செய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

August 16, 2026
சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!
காணொளிகள்

சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

August 16, 2026
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
Next Post
சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றுநோய்; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் தொற்றுநோய்; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.