இந்திய கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் மூன்று மாணவிகள், கடந்த 4ம் திகதி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கெமராக்களை,பொலிஸார் ஆய்வு செய்தனர்.
இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
அவர்களை பொலிஸார் விசாரித்த போது, கொரியாவில் பிரபல பிடிஎஸ் (BTS) இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்ப்பதற்காக கொரியா செல்ல முயற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.