நாட்டிலுள்ள 7,603,923 மின்பாவனையாளர்களில் மின்கட்டணம் செலுத்தாத 1,064,400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளன என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மின்கட்டண அதிகரிப்பு, மின் விநியோகத்துண்டிப்பு தொடர்பில் எழுப்பி, கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் வீட்டு மின்பாவனையாளர்கள் உட்பட 7,603,923 மின்பாவனையாளர்கள் அரச மற்றும் தனியார் மின்விநியோக கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மின்கட்டணம் செலுத்தாத 10,64 400 மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.