இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை சுமத்தியுள்ளதாக முன்னாள் அமம்சசர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சனத் ஜயசூரியவிற்கு எதிரான ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகம் தம்மிடம் தெரிவித்துள்ளது.
தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை இடைநிறுத்தி, இடைக்கால நிர்வாகக் குழு ஒன்றை நியமித்த போது இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டது.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக விவகாரங்களில் சனத் ஜயசூரியவை எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவுறுத்தியது.
எனினும் அன்று அவ்வாறு நிபந்தனை விதித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை, இன்று சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைதி காப்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை”என குறிப்பிட்டுள்ளார்.