ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து திட்டத்தை நிறுத்தியமைக்காக இலங்கை பணம் செலுத்த வேண்டும் என்று ஜப்பான் வலியுருத்தியுள்ளது.
இலங்கை வந்துள்ள ஜப்பானின் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவிடம், நிறுத்தப்பட்ட திட்டங்களை ஜப்பான் மீண்டும் தொடங்குவதற்கும், திட்டத்தை ரத்து செய்ததற்குமாக இலங்கை பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா,
“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை பாதிக்காது, இலங்கை கடன் மறுசீரமைப்பை விரைவில் முடிக்க வேண்டும்.
இதன் பின்னர் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்காக இரத்து செய்யப்பட்டதற்கான பணத்தை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஜப்பான் விரும்புகிறது.” என்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து திட்டத்தை நிறுத்த உத்தரவிட்டார்.
இது வாகன நெரிசலான தலைநகர் கொழும்பிற்கு செலவு குறைந்த தீர்வு அல்ல என்று கூறியிருந்தார்.