பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின்படி, போக்குவரத்து விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தேடப்பட்டு, அபராதம் குறித்த அறிவித்தல் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்படும்.
இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.