மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பழுகாமம் மற்றும் பட்டாபுர மக்களுக்கு பட்ஸ் அமைப்பினரால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பட்ஸ் அமைப்பின் பிரித்தானியா கிளை தலைவர் அழகரெத்தினம் கங்காதரனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய 60 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.