100 சதவீதம் மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரஸை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அந்த தகவலில் தெரிவித்துள்ளதாவது,
சீன ராணுவத்திடமிருந்து பயிற்சி பெற்ற வைத்தியர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர்.
அதன்படி, இந்த புதிய, கொடிய கொரோனா போன்ற வைரஸை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை முயற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்த பரிசோதனையில், எலிகளுக்கு என்ன ஏற்படும் என்று பார்ப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, 4 எலிகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றுக்கு, செயலிழக்க செய்யப்பட்ட வைரசை உட்செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர, இதே பரிசோதனையானது வேறு 4 எலிகளுக்கு நடத்தப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வைரசை உட்செலுத்திடாமல் மற்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.
இதில், ஆச்சரியம் அளிக்கும் வகையில், வைரசால் தொற்று ஏற்பட்ட அனைத்து எலிகளும் 7 முதல் 8 நாட்களில் உயிரிழந்து விட்டன.
இந்த ஆய்வின்போது, முதல் 5 நாட்களில் எலிகளின் எடை தொற்று ஏற்பட்ட பின்னர் குறைந்து போனது. அதன்பின்பு, அவற்றின் இயக்கமும் மந்தமடைந்தது. அவற்றின் கண்களும் வெளியேறி காணப்பட்டன.
எலிகளில் முதல் 3 நாட்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டபோதும், அடுத்த 3 நாட்களில் பல முக்கிய உறுப்புகளில் தொற்று பரவி பாதிப்பு உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரசானது, எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்றும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.
இந்த, சார்ஸ் கொரோனா வைரசுடன் தொடர்புடைய கொடிய வைரசானது எலிகளில் 100% உயிரிழப்பு ஏற்படுத்த கூடியது. இதனால், மனிதர்களுக்கு பரவும்போது அதுவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்த கூடிய ஆபத்து உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.