Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு!

மட்டக்களப்பில் சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பவற்றுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் (19.01.2024) இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன் ஆகியோருக்கு அவர்களது அலுவலகங்களில் வைத்து சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வேண்டுகோள் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் முன்வைப்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.

இந்நிலையில் இச்சட்டங்களுக்கு எதிராக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில், எதிர்வரும் திங்கட்கிழமை (22.01.2024) மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் நடைபெறும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கையளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
நாடாளுமன்ற உறுப்பினரே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகம் சார்பாகத் தங்களுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கை யாதெனில் இலங்கை அரசானது இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி, நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்ற செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றிக்கொண்டே வருகின்றன.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கூறலாம். அதேபோன்று இவ்வாறான சட்டங்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இல்லாது செய்வதற்க்குப் பயன்படுத்தப்படுகின்றமை யாவரும் அறிந்த யதார்த்தமாகும். அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது இவ்வாறே காணப்படுகின்றது.

குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக நாம் கருத்தில் கொள்வது யாதெனில் எதிர்காலங்களில் சுதந்திரமாகத் தகவல்களை அணுகுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இச்சட்டம் செயல்படும் என்பதில் எவ்வி மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆகையால் சிவில் சமூகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது எதிர்வரும் 22ஆம் மற்றும் 23.01.2024ஆம் திகதிகளில் இலங்கை நாடாளுமன்ற விவாதத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் இன்நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட வரைபைத் தாங்கள் எதிர்ப்பதோடு, சிறுபான்மைச் சமூகத்தினுடைய பார்வையினையும் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றோம். இத்தருணத்தில் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதி என்ற வகையில் எங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது தங்களது அடிப்படை கடமை என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?; நாளை இரகசிய வாக்கெடுப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?; நாளை இரகசிய வாக்கெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.