ரயிலில் பயணித்த ரஷ்ய பெண்ணொருவர் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
25 வயதுடைய கிறிஸ்டினா அலக்வானா என்பரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
இந்தப் பெண் இன்று வெள்ளிக்கிழமை (26) ஹிக்கடுவையில் இருந்து எல்ல நோக்கிச்சென்ற ரயிலில் பயணித்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவரது கடவுச்சீட்டு இவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.