Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு!

புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்களுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்
பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் 2022/2023 ஆண்டு தொடர்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள்
வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான புதுப்பிக்கப்படும் தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு , ஜனாதிபதி நிதியத்தின் www.facebook.com/president.fund என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை மற்றும் உத்தியோகபூர்வ YouTube செனலான
www.youtube.com/@PresidentsFund ஐ like/follow அல்லது subscribe செய்யுமாறும் www.presidentsfund.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு
செய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

August 24, 2026
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
செய்திகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

August 24, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

August 24, 2026
நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு
செய்திகள்

நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு

August 24, 2026
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

August 24, 2026
கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!
செய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!

August 24, 2026
Next Post
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் தொடர்பான அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் தொடர்பான அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.