Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘யுக்திய’ நடவடிக்கையால் போதைப்பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடமுடியாது; பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!

‘யுக்திய’ நடவடிக்கையால் போதைப்பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடமுடியாது; பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!

3 years ago
in செய்திகள்

பாடசாலை மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருப்பதாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை நாவற்குழியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது.

போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புகின்ற இராணுவப்பாணி நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகுவதைத் தடுக்கமுடியாது.

மாணவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்படுவதைத் தடுப்பதில் படைத்தரப்பு,ஆசிரியர்கள் எல்லோரையும் விடப் பெற்றோருக்கே பெரும் பொறுப்பு உண்டு.

இலங்கை அரசாங்கம் இப்போது மேற்கொண்டுள்ள போதைப்பொருளுக்கு எதிரான ‘யுக்திய’ நடவடிக்கையால் போதைப்பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடமுடியாது.

பெரும் வலைப் பின்னலாக இயங்கிக்கொண்டிருக்கும் போதை வியாபாரத்தில், சிக்கிவருவது கடத்தல்காரர்களும், சில்லறை வியாபாரிகளும் போதைப்பொருள் பாவனையாளர்களும் மாத்திரம்தாம்.

இதில் ஈடுபட்டுள்ள பெரும் முதலாளிகள் அரச உயர்மட்டங்களின் ஆசீர்வாதத்தோடு பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள். உறங்கு நிலையில் இருக்கும் இவர்கள் விரைவிலேயே மீள எழுவார்கள்.

கஞ்சா, கெரோயின் மாத்திரம்தான் போதைப்பொருள் அல்ல. கைவிடமுடியாத எல்லாப் பழக்கங்களுமே போதைதான்.

கைவிடமுடியாத அளவுக்கு புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் நேரகாலம் பாராது தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக்கிடைப்பதும், இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் கைப்பேசிகளுடனேயே செல்வதும் போதைதான்.

பிள்ளைகள் தங்கள் வழிகாட்டிகளாக முதலில் பெற்றோர்களையே ஏற்றுக்கொள்கிறார்கள்.

போதைப்பழக்கங்களுக்கு ஆளாகியுள்ள பெற்றோர்களால் ஒருபோதும் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட இயலாது. பிள்ளைகள் தவறிழைக்கும்போது தட்டிக் கேட்கவும் முடியாது.

பெற்றோர்கள் பாடசாலைகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிள்ளைகளை அனுப்பிவைப்பதுடன் தங்கள் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

முழுநாட்டையுமே போதைப்பொருட் பாவனை ஒரு புற்றுநோயாகப் பீடித்துவரும் நிலையில் எமது பிள்ளைகள் பெற்றோர்களால் கண்டிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய நண்பர்கள் தொடர்பாகப் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். போதைப்பொருட் பாவனை ஒருவழிப்பாதை போன்றது. இதில் ஒருதடவை பிரவேசித்தால் மாணவர்களால் திரும்பிவர முடியாது என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
அறிமுகமாகவுள்ள புதிய வரி; நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி!

அறிமுகமாகவுள்ள புதிய வரி; நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.