நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஓட்டமாவடியில் அரச திணைக்களங்கள்,மதஸ்தலங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன.
வாழைச்சேனை,கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,பிரதேச செயலகம்,பாடசாலைகள்,சுகாதார திணைக்களம்,பொலிஸ் நிலையங்கள் என பல்வேறு திணைக்களங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரதத்தான நிகழ்வுகள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் பல்லாண்டு மூலிகை கண்டு நடல் என்பன நடைபெற்றன.
அதில் ஒரு நிகழ்வாக ஓட்டமாவடி அல்கிமா நிறுவனம்,அகீல் எமஜென்சி அவசரசேவைப் பிரிவு, கல்குடா சுழியோடிகள் அமைப்பு,மற்றும் எவிசன் அமைப்பு என்பன ஒன்றிணைந்து சுதந்திர தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் சிங்களம்,தமிழ்,முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தத்தமது கலாச்சார நிகழ்வுகளுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முதலில் ஓட்டமாவடி பிரதான வீதியில் அகீல் எமஜென்சி நிறுவனப் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் தேசிய கொடியினை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடை பவனியை ஆரம்பித்து வைத்தார்.நடை பவனியானது கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக டைவர்ஸ் பார்க்கை சென்றடைந்தது.அங்கு பிரதம அதிதியாக வருகை தந்த 23 ஆவது காலால் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பேமரத்ன தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் சர்வமத அனுஸ்டானங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் தொடர்பான நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினார்.நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொலிஸ் அதிகாரிகள்,மரணவிசாரணை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.