வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதல் முறையாக ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக வவுனியா மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டு வரும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் பாலம்பிகை மண்டபத்தில் நேற்று (04.02) மாலை இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக சிவகுமார் திவியா தெரிவு செய்யப்பட்டார்.
வடக்கு கிழக்கில் பெண் ஒருவர் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக வருவது இதுவே முதல் முறையாகும். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் ஒரேயொரு பெண் ஊடகவியலாளர் அங்கத்துவம் வகித்த நிலையில் அதற்கான சந்தர்ப்பத்தினை ஏனைய ஊடகவியலாளர்கள் ஒருமித்து வழங்கியிருந்தார்கள்.
அத்துடன், சங்கத்தின் செயலாளராக சி.கஜேந்திரகுமாரும் பொருளாளராக சிறிதரன் மனோஜூம் உபதலைவராக இராசையா ஜெய்சங்கரும் உப செயலாளராக வரதராசா பிரதீபனும் தெரிவு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் ஆலோசகராக முன்னாள் தலைவர் சு.வரதகுமார் அவர்களும், கணக்காய்வாளராக இ.சற்சொரூபன் தெரிவு செய்யப்பட்டனர். சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி அனுமதி
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாடிய நிலையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரின் தாய் மற்றும் சகோதரர்களுக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்
விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது வருகைக்காக அவருடைய தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருப்பதோடு தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றமை தெரிந்த விடயமே.லொத்தர் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு முகவர்கள் தீர்மானம்
நாடளாவிய ரீதியில் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் நாளை(06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் சார்பில் கமிஷன் தொகை வழங்காமை மற்றும் சலுகைகள் மற்றும் பிற கொடுப்பனவுகளை வழங்காமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மொனராகலை பிரதேசத்தில் உள்ள லொத்தர் விற்பனை பிரதிநிதிகள் இன்று லொத்தர் விற்பனையில் இருந்து விலகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.