மட்டக்களப்பு பெம்டோ அமைப்பினரால், தீரணியம் திறந்த பாடசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் இன்று
கையளிக்கப்பட்டன. பெம்டோ அமைப்பினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, லண்டன் மனித நேய அமைப்பின் நிதியுதவியில், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு, மட்டக்களப்பு முதியோர் இல்ல ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை மற்றும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் ஆகியவற்றிற்கும் சக்கர நாற்காலிகளும் கையளிக்கப்பட்டன. தீரணியம் திறந்த பாடசாலை ஸ்தாபகர் உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயகுமார் தலைமையில், நடைபெற்ற மருத்துவ உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.
சென் ஜோன்ஸ் அம்புலன்ஸூன் மாவட்ட இணைப்பாளர் மீரா சாய்பு, தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலைய அதிபர் அருட்சகோதர் மைக்கல், தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலைய மேலாளர் அருட் சகோதரர் ஸ்டீபன் மெதிவு, பெம்டோ அமைப்பின் பொருளாளர் கணேச மூர்த்தி உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.