கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும், மட்டக்களப்பு தாண்டியடி சரவணபவன் பாலர் பாடசாலையில், கல்வி கற்று, இவ்வருடம் தரம் 1 க்கு செல்லவுள்ள மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பாடசாலை தலைமை ஆசிரியர் திருமதி தர்சினி தலைமையில் நேற்று காலை இடம் பெற்றது.
அதிதிகள் வரவேற்கப்பட்டு, இறை வணக்கம் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகளால் மாணவர் கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது. நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.