இலங்கை இராணுவத்தினால் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு நிர்மாணித்து கொடுக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக பிரிவின் புதிய காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில், வீடொன்றிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி 243 படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி 243 படைப் பிரிவின் பிரிகேடியர் சந்திம குமாரசிங்க கலந்து கொண்டார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆ பள்ளி வாயல் தலைவர் கே.எல்.எம்.பரீட் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
45 இலட்சம் ரூபா செலவில் இலங்கை இராணுவத்தின் முழு உதவியுடனும் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பயனாளியிடம் வீடு கையளிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.