நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காய உற்பத்திக்காக இலவசமாக காப்புறுதி வழங்குவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கமத்தொழில் மற்றும் கம நலக் காப்புறுதிச் சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
2024ஆம் ஆண்டில் இலங்கையின் சின்ன வெங்காய உற்பத்தியை மீண்டும் அதிகரிப்பதற்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள், வறட்சி மற்றும் அதிக மழை போன்ற காரணங்களால் நிகழும் தாக்கங்கள் என்பவற்றிற்காகவும் இக்காப்புறுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.