பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மட்டக்களப்பு காத்தான்குடி செயலணியின் கூட்டம் இன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி நிறுவன பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள், பிரதி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மீரா முகைதீன், பெண்கள் காப்பக பணிப்பாளர் சல்மா ஹம்ஸா, காத்தான்குடி தள வைத்தியசாலையின் உளநல பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் சுசிலா மற்றும் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தற்போதைய சூழலில் பதிவு செய்யப்படாத திருமணங்களினால் ஏற்படக்கூடிய பாதகமான சமூக விளைவுகளை குறைக்கும் நோக்கில் பள்ளிவாயல்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகள், அதிகரித்து வரும் இளவயது திருமணங்கள், இளவயது திருமணங்களின் போது ஏற்படக்கூடிய முரண்பாடுகளால் பதிவு செய்யப்படுகின்ற விவாகரத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் அவற்றை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், போதைப்பொருள் பாவனையின் காரணமாக உளநலம் பாதிக்கப்படுகின்ற குடும்ப உறுப்பினர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகள், போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் பாடசாலை மாணவ மாணவிகளை விழிப்பூட்டுவதற்காக மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-314.png)