இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) காலை 06.30 உடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நிலவும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பமளிப்பதாக சுகாதார செயலாளர் எழுத்துமூலம் உறுதி வழங்கியுள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்றும்(14) நேற்று முன்தினமும்(13) சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள், இரசாயன ஆய்வுகூட நிபுணர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் கலந்துகொண்டிருந்தனர்.