Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெல் கொள்வனவிற்கு கடன் திட்டமொன்று அறிமுகம்!

நெல் கொள்வனவிற்கு கடன் திட்டமொன்று அறிமுகம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள், தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இம்முறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக “மடபன” கடன் திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதியின் பொதுமக்கள் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு மற்றும் மத்திய தர அரிசி உற்பத்தி தொழில்துறையினர் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தரார்.

இந்த கடன் திட்டத்தின் கீழ், 09 பில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாவும், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்கும் தொகை நெல் சேகரிப்பாளர்களுக்கும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை கடனாக வழங்கப்படும்.

கடன் திருப்பிச் செலுத்த 180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். 15% வருட வட்டி விகிதத்தில் 4% வீதம் திரைசேறியினால் அந்தந்த வங்கிகளுக்கு வழங்கப்படும். அதன்படி, கடன் பெறுநர்கள் 11% மட்டுமே வருட வட்டி செலுத்த வேண்டும்.

விவசாசியகளுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுப்பதோடு, மக்களுக்கும் நியாயமான விலையில் அரிசியை பெற்றுக்கொடுப்பதே இக்கடன் திட்டத்தின் நோக்கமாகும் எனவும் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் அறுவடை ஆரம்பமாகும் வேலையில் விவசாயிகளுக்கு (நாடு கிலோ 105, சம்பா 120, கீரி சம்பா 130 ரூபாய் ) நிர்ணய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த கடன் வழங்கப்படும்.

நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024.01.24 அன்று முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

நாளாந்தம் அதிகபட்ச கதிரடிக்கும் கொள்ளளவு 25 மெற்றிக் டொன் என்ற அடிப்படையில் சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் மேற்கொண்டிருக்கும் சரியான ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் நெல் தொகை சேகரிப்பாளர்கள் இந்த “மடபன” கடன் திட்டத்திற்கு தகுதி பெறுவர்.

அதன்படி விரைவில் தமது சங்கத்தினர் மற்றும் சிறு, மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தி உரிய வங்கிகள் ஊடாக கடன் பெற்றுகொள்ள விண்ணப்பிக்குமாறு அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதியின் பொதுமக்கள் அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், இலகுவான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த கடன் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்று காரணமாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் பல நிதிப் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருந்ததுடன், இதன் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

விவசாய அமைச்சும் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் அகில இலங்கை அரிசி ஆலை தொழில்துறையினர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.