நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் திருமண வீதம் மற்றும் பிறப்பு வீதம் ஆகியன படிப்படியாகக் குறைந்து வருகின்றது. புதிதாகப் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் குறைந்துள்ளது.
தற்போது நாட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண் ஒருவரை தேடுவது கடினம்.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர் சனத்தொகையில் கணிசமான குறைவைக் காண முடியும் என தெரிவித்துள்ளார்.