Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பகுதியில் 41 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

வாழைச்சேனை பகுதியில் 41 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பகுதியில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 15ம் திகதி வரை 41 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப்சஞ்ஜீவ் வழிகாட்டலில் இன்று (15) வாழைச்சேனை கிராம சேவகர் பிரிவில் பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு வீடுகள், மதஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடத்தின் மாத்திரம் 41 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வாழைச்சேனையில் 23 பேர், கறுவாக்கேணியில் 12 பேர், கல்குடாவில் 06 பேராக 41 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று வாழைச்சேனை கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பற்றைக்காடாக காணப்பட்ட காணிகளை துப்பரவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாகவும், வாழைச்சேனையில் அதிக டெங்கு தாக்கம் காணப்பட்டதால் விழிப்புணர்வு நடவடிக்கை தினமும் இடம்பெற்று வருவதாகவும், பாடசாலை மற்றும் மதஸ்தலங்களை அடிக்கடி துப்பரவு செய்யுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
Next Post
கசிப்பு அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

கசிப்பு அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு