மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினரால் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக நேற்றையதினம் 22.04.2023 சனிக்கிழமை அன்று புத்தாண்டு கிராமிய விளையாட்டுகள் நடைபெற்றன. இந் நிகழ்வு கூழாவடி டிஸ்க்கோ விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமானது.
பிரதம அதிதியாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திரு. S.புவனேந்திரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. பிரசாந்தன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் ஜனாப். மு.ற .சியாஹீல் ஹக், மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் திரு.S. புவனேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.J. கணேசமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட செயலக தலைமை சமூர்த்தி முகாமையாளர் திரு.JF .மனோகிதராஜ், கூழாவடி டிஸ்க்கோ விளையாட்டுகழக தலைவர் திரு. றொக்சன் பீற்றஸ் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், சாக்கோட்டம், சமநிலை ஓட்டம் போன்ற விளையாட்டுகளும், இளவயதினருக்கான முட்டை மாற்றுதல்,போத்தலில் நீர் நிரப்புதல், முட்டி உடைத்தல், சைக்கிள் மெல்லோட்டம் போன்ற விளையாட்டுகளும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தேங்காய் துருவுதல், ஊசியில் நூல் கோர்த்தல், கிடுகு பின்னுதல் , தொப்பி மாற்றுதல், சங்கீத கதிரை போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. இவ்விளையாட்டுகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.