Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி சக்தி வித்தியாலயத்தில் உயர் கல்வி போதனையை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்!

கல்லடி சக்தி வித்தியாலயத்தில் உயர் கல்வி போதனையை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்க்குட்பட்ட கல்லடி சக்தி வித்தியாலயத்தில் கல்வி போதனைகளை விஸ்தரிக்கும் பொருட்டு கல்வி பொது தராதர சாதாரண வகுப்புகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை இன்று (19) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கல்லூரியின் அதிபர் எஸ். பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டகளப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த சாதாரண வகுப்பு போதனைகளை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதற்கென புதிய வகுப்பறைக்கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி ஷாமினி ரவி, திட்டமிடல் பிரதி பணிப்பாளர் திருமதி கரண் யா சுபாகரன், இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுராச்சி சானந்தா மகராஜ், மாணவர் சங்கம் ,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.

இப்பாடசாலையின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் பிரதேச பெற்றோர் அபிவிருத்தி சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தியும், மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

இவ்வருடத்திற்கான இலவச பாட விநியோகத்தையும் இராஜாங்க அமைச்சர் சிவனேத்துரை சந்திரகாந்தன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இங்கு கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில், பின்தங்கிய பிரதேச கல்வி அபிவிருத்தியில் அரசாங்கம் கூடுதல் கரிசனை காட்டி வருகிறது. அந்த வகையில் இப்பிரதேச பாடசாலையின் கல்வி போதனையை விஸ்தரிப்பதற்கு தாம் முயற்சி எடுத்தமைக்கு தான் மனமார மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த அவர், இந்திய நாட்டு உதவி திட்டங்கள் தற்பொழுது வடபகுதியில் மாத்திரம் பயன்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் வழி செய்திருப்பதாகவும் காலத்தின் தேவை கருதி கிழக்கு மாகாணத்திற்கும் இந்திய அரசாங்கம் கல்வி அபிவிருத்தி உட்பட ஏனைய உதவிகளை வழங்குவதற்கு முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே போல இந்த பாடசாலையில் ஆங்கில போதனை மற்றும் கணினி அறிவு வளர்ச்சி பெற தன்னால் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
Next Post
பணம் கேட்ட மகன்; சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை!

பணம் கேட்ட மகன்; சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு