இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் (19) பாடசாலை அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல். கஜரூபன், எம். காந்தன், ஆர். ஜெகனாதன், அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்த தி. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இப்பாடசாலை தேசிய சுற்றாடலுக்கான “சுவசர தக்சலாவ” ஜனாதிபதி விருதினை தொடர்ச்சியாக 2015, 2016, 2017 என மூன்று முறை பெற்றுள்ளதுடன் பொலித்தீன் அற்ற பாடசாலையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.