“எமக்காக நாம் உதவிடுவோம்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 21 நடைபெற்றது.
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவிலங்கதுரை கிராமத்தில் பொது அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மட்டக்களப்பு மாவிலங்கதுறை விக்னேஸ்வரா வித்யாலய மாணவர்களுக்கே இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

எமக்காக நாம் அமைப்பின் தலைவர் திரு தீபாகரன், அதன் இணைப்பாளர்கள், பிருந்தாவன், தரணிராஜூ , கேதீஸ்வரன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர், இளைஞர் கழக தலைவர், உப தலைவர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் தேவைப்பாடு உடைய 60 மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












