மத்தறையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் குழுவை ஏற்றி சென்ற தனியார் பேருந்து ஒன்று
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று வியாழக்கிழமை (22) இரவு வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி, கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என நானுஓயா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


பேருந்து பயணித்த போது அதில் 40 பேர் இருந்ததாகவும் இதில் குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் பாதுகாப்பாக நானுஓயா சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
