பம்பலப்பிட்டி, மிலகிரிய அவென்யூ, பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 74 வயதுடைய ஜெயானந்தன் வேலு அம்மா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.