கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்கம்(Eastern University, Sri Lanka Alumni Association – EUSLAA) ஒழுங்கமைத்து நிதி அனுசரணை வழங்கிய “வெற்றிக்கான மென் திறன்கள்” எனும் தொனிப்பொருளில் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி நெறி நேற்று முன்தினம் (21/2/2024) சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0037-1024x472.jpg)
இந்த நிகழ்வில் தொடக்க, நிறைவு உரைகளை தொழில் வழிகாட்டல் ஒருங்கிணைப்பாளர் திரு.T.வாகீசன் வழங்கியிருந்ததுடன், குறித்த மாணவர்களுக்கு வைத்தியர் துரைராஜா பிரஷாந்தன் பங்குபற்றல் அணுகுமுறையில் சுய ஊக்குவிப்பு என்னும் பயிற்சியை நடாத்தினார்.
இதில் கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர் சங்க தலைவர் திரு.சீ.ஜெயக்குமார், பொருளாளர் திரு.G.D நிர்மல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு போதுமான ஊக்குவிப்புகளை வழங்கியிருந்ததுடன்.
இராசதுரை அரங்கில் சுமார் 150 மாணவர்கள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0036-1024x682.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0038.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0039-1024x682.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0040-1024x682.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0041-1024x682.jpg)