Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என்னை புலியென்று கூறுவது எனக்கு மகிழ்ச்சியே ; சபையில் சாணக்கியன்!

என்னை புலியென்று கூறுவது எனக்கு மகிழ்ச்சியே ; சபையில் சாணக்கியன்!

3 years ago
in செய்திகள்

தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்துப் பேசும் போது எனக்குப் புலி என்று முத்திரை குத்தினால் அதுவே எனக்கு பெருமை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் எனக்கு உரையாற்றுவதற்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை. அதனை நான் மீண்டும் மீண்டும் கேட்டபோது அமைச்சர் மனுச நாணயக்கார என்னைப் புலி எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சபையில் அநேகமான உறுப்பினர்களுக்கு அவர்களது கேள்விகளை கேட்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. எனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை.

கிழக்கு மாகாணத்தை நான் பிரதிநித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் எனது கட்சி சார்பாக அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவன். மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வு ரீதியான பிரச்சினையொன்று அண்மைக்காலமாக காணப்படுகின்றது. சுமார் 50,000க்கும் மேற்பட்டவர்கள் போக்குவரத்து பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

மாகாணசபைகள் தற்போது இயங்குவதில்லை. இவ்விடயம் தொடர்பாக மாகாண ஆளுநரும் அது தொடர்பில் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார். அவர் ஒரு இனவாதியைப் போலவே செயற்பட்டு வருகின்றார். சிங்கள மக்களின் காவலர் என்ற இனவாத போக்கிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செயற்பட்டு வருகின்றார் போக்குவரத்து பிரச்சினையை அந்த மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் இன்று இந்த சபையில் போக்குவரத்து அமைச்சரிடம் அது தொடர்பிலான கேள்வியை முன்வைத்தேன். நான் முன்வைத்த பிரச்சினை என்பது உணர்வு ரீதியான பிரச்சினை இல்லை என்று பிரதிசபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் அது உணர்வு ரீதியிலான பிரச்சினையாக இருக்கும். நான் எனது மக்களின் பிரச்சினையை சபைக்கு எடுத்துக்கூறும் எனது ஒலிவாங்கியை நிறுத்துகின்றனர். ஒரு அமைச்சரவை அமைச்சர் என்னை புலி என்று அழைக்கின்றார். என்னை இனவாதி என்று அழைக்கின்றார்கள்.

வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இந்த சபையில் மறுசீரமைப்பில் சம்பியன் என்று அவர்கள் தங்களைப் புகழாரம் சூட்டிக்கொள்கின்றார்கள். அண்மையில் தென்னாபிரிவுக்கு இன்பச் சுற்றுலாவை மேற்கொண்டு நல்லிணக்கம் தொடர்பிலான கற்றலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

நல்லிணக்கம் தொடர்பில் கற்றுவந்த அமைச்சர் அலி சப்ரி, நான் எனது மக்கள் குறித்து கூறும் போது அதனை அலட்சியப்படுத்துகின்றார்.

எனது மக்களின் பிரச்சினையை இந்த நாடாளுமன்றத்தில் கூறுவதால் எனக்கு புலி என்று பெயர் வைப்பார்களேயாயின் அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றேன். என்னை புலி என்று நீங்கள் கூறுங்கள். ஆட்சேபனை இல்லை.

தமிழ் மக்களது பிரச்சினையை பேசும் போது அதற்கு நீங்கள் புலி என்று முத்திரை குத்துவீர்களேயாயின் அதுவே இந்த நாட்டினுடைய சாபக்கேடு என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார
செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை உறுதி; ஹர்ஷண நாணயக்கார

July 28, 2026
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

July 28, 2026
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
Next Post
பாடசாலை மாணவனை எட்டி உதைத்த போதகர்!

பாடசாலை மாணவனை எட்டி உதைத்த போதகர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.