Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெவிநுவரயில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்பலவண்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர பெரஹராவில் பங்கேற்க வந்த காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த பலர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரஹரா பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 1,500 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து காவடி நடனக் குழுக்களும் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவடி நடனக் குழுக்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டு இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு அண்மையில் கோயிலுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் அளவுக்கு தீவிரமடைந்திருந்தது.

இந்தப் பின்னணியில், காவடி நடன ஊர்வலத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை மாவட்டச் செயலாளருக்கு பரிந்துரைத்திருந்தார்.

எனினும், நேற்று (27) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, தெவிநுவர வருடாந்திர பெரஹரா இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது நீட்டிப்பு; சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை – நளிந்த ஜெயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு