மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடத்திய தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பொது நூலக வளாகம் ஏறாவூரில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் ‘கிராத்’ ஓதும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகவுகள் யாவும் நடைபெற்றது.
வாசிப்பு மாத போட்டி நிகழ்சிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பேச்சு,பாடல், நடனம் என பல்வேறுபட்ட கலை, கலாச்சார நிகழ்சிகள் நடைபெற்றன.
பிரதம அதிகள்.கௌரவ அதிகள் கலந்து கொண்டு வாசிப்பின் மகத்துவம் தொடர்பாக சிறப்புரையாற்றினார்கள்.இந் நிகழ்வில் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ‘உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது’ என்ற தொணிப் பொருளில் பிரதேச பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சிறந்த வாசகர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வீட்டு நூலக பாவனையை பிரதேசத்தில் செயற்படுத்தி வருவோர் இனம் காணப்பட்டு பாராட்டப்பட்டனர்.
மேற்படி பொது நூலகத்தில் கடைமையாற்றும் நூலக உத்தியோகஸ்த்தர்கள் விசேட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந் நிகழ்வில் விசேட நிகழ்வாக குறித்த நூலகத்தின் வளர்சிக்கு பல்வேறு வகைகளிலும் சேவையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலான அவர்களுக்கு நூலக அபிவிருத்தி குழுவினரால் பொன்னனாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌளரவித்தனர்.
இதேபோன்று குறித்த நூலகத்தில் கடைமையாற்றி ஒய்வு பெற்றுச் சென்ற நூலகர் திருமதி விமலா சித்திரவேல், இடமாற்றம் பெற்றுச் சென்ற நூலகர் க.ருத்திரன் மற்றும் நூலகத்தின் வளர்சிக்காக சேவையாற்றும் சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர் ஏ.காருன் ஆகியோர்களும் பொன்னனாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியின் ‘கொகா நூலக தண்ணியக்கமாக்கல்’ நூலக சேவை செயற்பாடு வாசகர் நன்மை கருதி பிதம அதிதியானால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா,ஏறாவூர் நகரசபை கணக்காளர் ஆர்.எவ்.புஸ்றா,நிர்வாக உத்தியோகத்தர் திருமதி நபீரா அகமட் ரசீன் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.காருன் ஆகியோர்கள் கௌரவ அதிதகளாக கலந்து கொண்டனர்.