10,000 ரூபா இலஞ்சம் பெற்ற இத்தபானை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று (27.02) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யகிரல பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முறைப்பாட்டாளரின் போக்குவரத்து வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கும், சட்டரீதியான சாரதி அனுமதிப்பத்திரமா எனச் சரிபார்த்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் 10,000 ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய தொகையை பெற்றுக்கொண்டு அதற்கு உதவியமைக்காக இத்தேபனை பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.