இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனுக்கு கற்றல் செயற்பாட்டில் ஈடுபட இடைக்கால பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையிலையே மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் குறித்த பணித்தடை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் மாகாண இடமாற்ற மேன்முறையீட்டு சபையில் நடந்த மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாபன விதிக்கோவையின் பிரிவு 2 அத்தியாயம் 48ன் 31.1.13ம் வாசகத்திற்கமைவாக “அரச அலுவலர் ஒருவரின் கடமைக்கு தடையேற்படும் வகையில் நடந்துகொள்ளல் அல்லது செயற்படுதல் அல்லது அரச அலுவலர் ஒருவரை அவமானப்படுத்துவதற்கு இழிவுபடுத்துவதற்கு அல்லது சரீர வதைகளுக்கு உள்ளாக்க அல்லது எச்சரிக்கை செய்ய முயலுதல்” என்பனவற்றின் அடிப்படையில் அவருக்கு இந்த பணித்தடை விதப்பட்டுள்ளது.