Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று முதல் வட மாகாண தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது!

இன்று முதல் வட மாகாண தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பினை அடுத்து யாழ் மாவட்ட தூர சேவைச் சங்கத்தின் பேருந்து உரிமையாளர்களும், ஏனைய மாவட்ட சங்கப் பிரதிநிதிகளும் இன்று(27) காலை 8 மணிக்கு மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்திற்கு நாம் சென்றிருந்தோம்.

இந்தநிலையில் அமைச்சர் எமது தரிப்பிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் சேவையில் ஈடுபடுவதற்காக நிற்கும் பேருந்துக்களை அவ்விடத்தில் தரித்து நிற்க வேண்டாம் என பொலிசாரின் முன்னிலையில் கூறி அவ்விடத்திற்கு “No Parking ” (வாகனங்கள் நிறுத்தக்கூடாது) என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒத்துழைப்பின்மையால், குறுகிய அதாவது ஒரே நேரத்தில் 04 பேருந்துக்களை மட்டும் தரித்து நிற்கக் கூடிய மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்தில் சேவையில் ஈடுபடும் நாம் தற்போது அமைச்சரின் அறிவுறுத்தலால் 02 பேருந்துகள் மட்டும் தரிக்கக் கூடிய தரிப்பு நிலையமாக உள்ளது.

இதனால் அவ்விடத்தில் இருந்து தூர சேவைகளுக்கான சேவைகளை ஆற்ற முடியாதுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பேருந்துக்கள் தரித்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்நிலையினை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எம்மிடம் இருந்து பணங்களை அறவிடுவதில் மட்டும் விளிப்பாக இருக்கின்றது.

நாம் மின்சார நிலைய வீதியில் சிறிய குறுகிய தரிப்பிடத்தில் இருந்து மிகக் கஷ்டான சூழ்நிலையில் சேவையில் ஈடுபடுவதையும் எமக்கான தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாது அசமந்தப் போக்கில் இருக்கின்றது.

இந் நிலையில் ஐந்து மாவட்டச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மீண்டும் அமைச்சருடன் கலந்துரையாடி, எமது தரிப்பு நிலையத்தில் இருந்து சேவைகளை ஆற்ற முடியாத நிலையினை தெரிவிக்கும் முயற்சிகள் பலனளிக்காத காரணத்தினால், தூரசேவைகளுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகளும், இலங்கை போக்குவரத்துச் சபையின் தூரசேவைகளும் புதிய தரிப்பிடத்தில் இணைந்து சேவைகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும் வரை வடமாகாணத்திற்குள்ளான அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பததை அறியத்தருகின்றோம் – என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.