Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இலங்கையிலுள்ள சவூதி அரேபியத் தூதுவர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளேன்.

அவரது விடுதலைக்காக செய்ய முடியுமான அதிகபட்ச தலையீடுகளை கட்சி, இனம், மதம், சாதி பேதமின்றி செய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சிவராசா அனோஜன் பேஸ்புக் ஊடாக செய்த தவறான கருத்துப் பரிமாற்றம் காரணமாக பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அவரது விடுதலைக்காக எடுக்கக்கூடிய உச்சக்கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.

எந்தத் தரப்பிலிருந்தாவது சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவருக்கு விடுதலை கிடைக்கும் வரை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதற்காகக் குரல் கொடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிவராசா அனோஜனுக்கு ஏற்பட்ட இந்தத் தவறுக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு நிவாரணம் வழங்கி, முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபியாவின் மன்னரிடம் கனிவாகவும், கௌரவமாகவும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பதற்காக அனோஜனின் பெற்றோர் இன்று காலை கொழும்பிற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பான விடய விபரங்களைக் கேட்டறிந்தார். 

மேலும் சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் எதிர்க்கட்சித் தலைவர் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்த பின்னர் நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என இங்கு பெற்றோர் மத்தியில் தெரிவித்தார். 

இச்சந்தப்பில், சிவராசா அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!

November 5, 2026
பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!
செய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!

November 5, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்

November 5, 2026
“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்
காணொளிகள்

“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்

November 5, 2026
18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!
செய்திகள்

18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

November 5, 2026
Next Post
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு